இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனைத்தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் துணிவு என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் இணைந்து நடித்துள்ளார்.
இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகள் தொடங்கின. இந்நிலையில் இன்று(நவ-4) அஜித் தனது டப்பிங்கை முடித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அஜித் டப்பிங் செய்வது போன்ற புகைப்படத்தை நடிகை மஞ்சு வாரியர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
படத்தின் டப்பிங் முடிந்துள்ள நிலையில், இறுதிக் கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே நாளில் விஜய்யின் வாரிசு ரிலீஸாக இருப்பதால் இருதரப்பு ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க;2k கிட்ஸ்களைக் கவர்ந்த லவ் டுடே(Love Today) திரைப்படம்!