ஹைதராபாத் (தெலங்கானா): பாலிவுட் நடிகர் அமீர் கான் தெலுங்கு நடிகர் ராம்சரணை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை ராம் சரணின் மனைவி உபசனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அவர் பதிவிட்ட புகைப்படத்தில் அவர்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
மேலும் அவர் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ராம்சரண் இயக்குநர் சங்கர் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.