வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில் பிரகாஷ்ராஜ், பிரபு உள்ளிட்ட நடிகர்கள் இணைந்துள்ளனர். நடிகர் விஜய் முதல்முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி இயக்குகிறார். ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். தமன் இசை அமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தெறி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் பிரபு. இவர்களை தொடர்ந்து நடிகை ஜெயசுதாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: “சிவாவை பார்த்து அழுதுட்டேன்” - டான் பட விழாவில் சமுத்திரகனி