சென்னை: ராங்கி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை திரிஷா,” முதலில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் தமிழ் குமரனுக்கு நன்றி. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை ஒப்புக்கொண்டு மிக பிரமாண்டமாக எடுத்ததற்கு. கரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகள் எதுவுமே நடக்கவில்லை. இப்படம் வெளிவருவதற்குக் காரணமான லைக்காவுக்கு நன்றி என தெரிவித்தார்.
மேலும், ஒரு நடிகையாக நடித்துவிட்டு சென்றுவிடுவேன். அதன்பிறகு படக்குழுவினர் சிறப்பாக பணியாற்றி படத்தைத் தூக்கி நிறுத்தியுள்ளனர். படம் நன்றாக வந்துள்ளது. இதற்குப் பிறகு ரசிகர்கள் கையில்தான் உள்ளது.
இப்படத்தில் ஆக்சன் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. முதல்முறையாக உஸ்பெகிஸ்தானில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். சவாலான இடம் அது. மொழி பிரச்சினை இருந்தது. ராணுவ உபகரணங்கள் எல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார். அதுவும் சவாலாக இருந்தது. படக்குழுவினருக்கு நன்றி. படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள்” என்றார்.
இதையும் படிங்க:Margazhiyil Makkalisai 2022:இயக்குநர் பா.இரஞ்சித்தின் 'மார்கழியில் மக்களிசை 2022' நாளை ஆரம்பம்