சென்னை: சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தவர், நடிகை சித்தி இத்னானி. இவர் அடுத்ததாக ஆர்யாவுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். அதேபோல் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக '100 கோடி வானவில்' படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை சித்தி இத்னானி, சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்குச்சென்று, அங்குள்ள முதியவர்களுக்கு உணவு வழங்கியுள்ளார். பின்னர், முதியோர்களுடன் அன்பாகப்பேசி மகிழ்ந்தார். சித்தி இத்னானியின் செயலைப் பாராட்டிய முதியோர்கள், அவரை வாழ்த்தி வழியனுப்பினர்.