ETV Bharat / entertainment

அனுஷ்காவின் சிரிப்பு நோய்… என்ன சொல்கிறார் மருத்துவர்? - anushka disease

நடிகை அனுஷ்கா தனக்கு அரிய வகை சிரிக்கும் நோய் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 17, 2023, 4:23 PM IST

20 நிமிடங்கள் விடாமல் சிரிக்கும் நடிகை அனுஷ்கா… காரணம் என்ன

சென்னை: நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அருந்ததி, சிங்கம், பாகுபலி உள்ளிட்ட படங்களில் பிரபலமடைந்தவர். அனுஷ்கா சமீபத்திய பேட்டியில் தனக்கு அரிய வகை நோய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், 'எனக்கு அரிய வகை சிரிக்கும் வியாதி உள்ளது. நான் சிரிக்கத் தொடங்கினால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துக்கொண்டே இருப்பேன். சில நேரங்களில் நான் சிரிக்க துவங்கினால் படப்பிடிப்பு கூட நின்றுவிடும்' எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய நரம்பியல் நிபுணர் நரேந்திரன் கூறும்போது, 'சிரிக்க ஆரம்பித்தால் அடக்க முடியாமல் சிரிப்பது மற்றும் சம்பந்தமில்லாத இடத்தில் சிரிப்பது இது இரண்டும் ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.

மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் சிலருக்கு சில நேரங்களில் சிரிப்பும், அழுகையும் வரலாம். இந்த சிரிக்கும் நோய் வயதானவர்களுக்குத் தான் வரும். மனவியாதி உள்ளவர்களுக்கும், மூளை ஏற்படும் மாற்றங்களினாலும் இது போன்ற நோய்கள் வரலாம். இந்த நோய்க்கு முறையான பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்தப்படுத்த முடியும்' எனத் தெரிவித்தார்.

இதேபோல் நடிகைகள் சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் தங்களது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து ஊடகங்களில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Vaathi movie: "தனுஷ் தான் எங்கள் வாழ்க்கை": கோவையில் ரசிகர்கள் ஆரவார கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.