இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தியன் 2 படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கரோனா, படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது.
இதனால் இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம் சரணை ஹீரோவாக வைத்து புதிய படத்தை தொடங்கி படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார். தற்போது ‘இந்தியன் 2’ படத்தின் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் ‘இந்தியன் 2’ படத்தை தயாரித்து வந்த நிலையில், தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இப்படத்தின் தயாரிப்பில் கைகோர்த்துள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தில் விவேக் நடித்த காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டன. ஆனால் விவேக் உயிரிழந்துவிட்டதால் அவரது காட்சிகளை இயக்குனர் ஷங்கர் நீக்கியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் தொடர் படப்பிடிப்புகளால் மகிழ்ச்சியான பெப்சி தொழிலாளர்கள்