சென்னை: ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வரும் ஆக்ஷன் படம் "லத்தி". இதில் நாயகனாக விஷால் நடிக்கிறார். அவருடன் சுனைனா, பிரபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வினோத்குமார் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு பலமுறை காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ வரும் 5ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் காந்தி டாக்ஸ் மௌனப் படம்