ETV Bharat / entertainment

ஆராரிரோ கேட்குதம்மா.. தாய் ஷோபா உடன் விஜய்! - Viral photo

நடிகர் விஜய் தனது தாய் ஷோபா சந்திரசேகர் உடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆராரிராரிரோ கேட்குதம்மா.. தாய் ஷோபா உடன் விஜய்!

author img

By

Published : Apr 25, 2023, 10:44 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய், தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் நடைபெற்று முடிந்த இதன் படப்பிடிப்பு, தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா சந்திரசேகர் தம்பதியின் 50வது திருமண நாளை ஒட்டி, புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில், தனது தாயார் ஷோபா சந்திரசேகர் மேலே அமர்ந்திருக்க, மகன் விஜய் தரையில் அமர்ந்திருக்கிறார்.

மேலும், விஜய்யின் தோள் மீது கை வைத்திருக்கும் ஷோபா சந்திரசேகரும், விஜய்யும் புன்முறுவலோடு போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம்தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. தனது ஆரம்ப காலக் கட்டத்தில், பின்னணி பாடகியான தாய் ஷோபா சந்திரசேகர் உடன் இணைந்து விஜய் பாடல்களைப் பாடி உள்ளார்.

இதற்கு, விஜய்யின் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான ‘விஷ்ணு’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா..’ என்ற எவர்கிரீன் பாடலே சாட்சியாக இருக்கிறது. மேலும், பெற்றோரின் திருமண நாளில் வைரலாகும் இந்த புகைப்படத்தில், தந்தை சந்திரசேகர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தனது பெற்றோரை சந்திக்காமல் விஜய் கடந்து சென்ற நிகழ்வும் அரங்கேறியது. இதனிடையே, தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் பணிகளை, விஜய் அவ்வப்போது முடுக்கி விட்டு, அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் கவனத்தையும் பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: சுதந்திர தினத்திற்கு வெளியாகுமா ஜெயிலர்?… ரசிகருடன் மோதுகிறாரா ரஜினி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.