ETV Bharat / entertainment

2026 சட்டப்பேரவைத்தேர்தல்.. பனையூரில் குவிந்த நிர்வாகிகள்... விஜயின் அடுத்த மூவ் என்ன? - actor vijay discuss about upcoming election

நடிகர் விஜய், 234 சட்டமன்றத் தொகுதியில் உள்ள தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து சந்திக்கிறார். முதல் கட்டமாக கிட்டத்தட்ட 15 மாவட்ட நிர்வாகிகளை நண்பகல் 2.45 மணியில் இருந்து சந்தித்து வருகிறார்.

vijay makkal iyakka nirvakigal sathippu
vijay makkal iyakka nirvakigal sathippu
author img

By

Published : Jul 11, 2023, 3:40 PM IST

Updated : Jul 11, 2023, 4:30 PM IST

சென்னை: நடிகர் விஜய், 234 தொகுதிகளில் உள்ள தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக நேற்று(ஜூலை 10) தகவல் வெளியானது. மேலும் இந்தச் சந்திப்பு காலை 9 மணி முதல் 10 மணிக்குள் துவங்கும் எனத் தகவல் கிடைத்தது. இந்நிலையில், இன்று காலை விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் பனையூரில் உள்ள நடிகர் விஜயின் அலுவலகத்திற்கு வருகைபுரிந்தனர். அதன் தொடர்ச்சியாக நண்பகல் 2.45 மணியில் இருந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து வருகிறார். முதற்கட்டமாக இன்று 10-ல் இருந்து 15 மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் எனத் தெரிகிறது. நடிகர் விஜய் நிர்வாகிகளை சந்திக்கும் இந்த நிகழ்வு இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் வரை நடைபெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளான இன்று சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், விருதுநகர், அரியலூர், திருச்சி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை, திருப்பூர், சிவகங்கை, நாகை, பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய அமைப்புரீதியிலான மாவட்டங்களில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கிறார். இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் நடக்கும் இந்தச் சந்திப்பில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் நடிகர் விஜய் சந்திக்க உள்ளார் எனத் தகவல் கிடைத்துள்ளது.

முன்னதாக இன்று, விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக, சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோனின் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் இதேபோல் அண்ணல் அம்பேத்கர், பாவேந்தர் பாரதிதாசன், தீரன் சின்னமலை போன்ற தலைவர்களின் பிறந்த நாட்களிலும் அவர்களின் உருவச்சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைப் போன்ற செயல்பாடுகள் ஒரு முழு நேர அரசியல் கட்சியின் செயல்பாடுகளை போல் உள்ளது. மேலும் இவை நடிகர் விஜயின் அரசியல் வருகையை உறுதி செய்யும் விதத்திலும் உள்ளதாகத் தெரிகிறது.

  • தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,

    சுதந்திரப் போராட்ட வீரர் #மாவீரன்_அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு.!

    • தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக @TVMIoffl,#சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து… pic.twitter.com/HzK5qnrFlZ

    — Bussy Anand (@BussyAnand) July 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: K Palaniswami: அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து பதிவு.. தேர்தல் ஆணைய முடியாவல் ஈபிஎஸ் தரப்பு கொண்டாட்டம்!

Last Updated : Jul 11, 2023, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.