ETV Bharat / entertainment

அன்பு இதயங்களே நான் 90% குணமடைந்து விட்டேன் - நடிகர் விஜய் ஆண்டனி ட்வீட்! - Actor Vijay Antony accident issue

படப்பிடிப்பு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் விஜய் ஆண்டனி தான் 90 சதவீதம் குணமடைந்துவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அன்பு இதயங்களே நான் 90% குணமடைந்து விட்டேன் - நடிகர் விஜய் ஆண்டனி ட்விட்!

author img

By

Published : Feb 3, 2023, 3:05 AM IST

  • அன்பு இதயங்களே
    நான் 90% குணம் அடைந்து விட்டேன்.
    உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.
    என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்😊
    வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்🙏
    அன்புக்கு நன்றி

    — vijayantony (@vijayantony) February 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சென்னை: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் விளங்குபவர், விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான நான், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இவர் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு மலேசியாவின் உள்ள லங்காவி தீவில் படமாக்கப்பட்டு வந்தது. படப்பிடிப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. 120 கி.மீ வேகத்தில் பைக் போட் ஓட்டிய விஜய் ஆண்டனி முன்னால் இருந்த படகு மீது மோதி தண்ணீரில் விழுந்துள்ளார். மேலும் விஜய் ஆண்டனிக்கு நீச்சல் தெரியாமல் அதிக தண்ணீரைக் குடித்த நிலையில் மீட்கப்பட்டு படக்குழுவினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அந்த விபத்தில் அவரது முகம் முற்றிலும் சேதமடைந்து, பற்கள் உடைந்து சுய நினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். பின்னர் சென்னையில் மேல் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் தாம் குணமடைந்து வருவதாக விஜய் ஆண்டனி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், "அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் 'பிச்சைக்காரன் 2' பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்.
அன்புக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பள்ளிக்கு கட்.. முருகபக்தர்களிடம் அன்னதானம் வாங்கி உண்டு உறக்கம்: போலீஸை கதறவிட்ட சுட்டி பாய்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.