அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நேற்று(மே 21) வெளியாகியுள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. உதயநிதி ஸ்டாலின், ஆரி, ஷிவானி ராஜ்குமார், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தியில் வெளியான ’ஆர்ட்டிகள் 15’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆன இப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.

இப்படத்தை வெற்றிப்படமாக கொடுத்த இயக்குனர் அருண்ராஜா காமராஜுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில், “நெஞ்சுக்கு நீதி படத்தை கொடுத்ததற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு அருண்ராஜா காமராஜ், “நன்றியும் அன்பும் சார்” என்று பதில் பதிவிட்டுள்ளார்.