ETV Bharat / entertainment

உடல் நலம் பெற்று பூரண குணமடைந்தார் நடிகர் டி.ராஜேந்தர்! - பத்து தல

சமீபத்தில் நடிகர் சிலம்பரசனின் தந்தையும் பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நலம் குன்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், பூரணமாக குணமடைந்துள்ளார்.

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்
author img

By

Published : Jul 6, 2022, 2:43 PM IST

சில தினங்களுக்கு முன் சென்னையில் டி.ராஜேந்தருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இதையடுத்து அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், வெளிநாட்டுக்கு டி. ராஜேந்தர் அழைத்துச் செல்லப்பட்டார். நடிகர் சிலம்பரசன், தன்னுடைய நடிப்பு பணிகளை நிறுத்தி விட்டு, தன் தந்தையின் மேல் சிகிச்சைக்கான அனைத்து பணிகளையும் முன்னின்று செய்தார்.

வெளிநாட்டு மருத்துவமனையில் அவருக்கு மேல் சிகிச்சை தரப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியால், அங்கேயே ஒரு மாதம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

இதுவரையிலும் உடனிருந்து, அனைத்து பணிகளையும் முன்னின்று கவனித்துகொண்ட நடிகர் சிலம்பரசன், தன் தந்தை ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு, தற்போது படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார். உடல்நிலை குணமடைந்த நிலையில், தற்போது முழுமையாக ஓய்வெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: "21 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்துள்ளேன்" - திண்டுக்கல் லியோனி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.