68வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 2020இல் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது.
தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்வை சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
தேசிய விருது பெறுகிற சுதா கொங்கரா, ஷாலினி உஷாநாயர், ஜி.வி. பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணை நின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது.
மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் சகோதரர் அஜய் தேவ்கனுக்கும், மேலும் தேசிய விருது பெறுகிற இயக்குநர் வசந்த் சாய், ஸ்ரீகர் பிரசாத், லஷ்மி ப்ரியா சந்திரமௌலி, இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் 68வது தேசியவிருது பெறுகிற சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
-
மனமார்ந்த நன்றி!
— Suriya Sivakumar (@Suriya_offl) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Overwhelmed!! #SooraraiPottru pic.twitter.com/fxGycj7h4Y
">மனமார்ந்த நன்றி!
— Suriya Sivakumar (@Suriya_offl) July 22, 2022
Overwhelmed!! #SooraraiPottru pic.twitter.com/fxGycj7h4Yமனமார்ந்த நன்றி!
— Suriya Sivakumar (@Suriya_offl) July 22, 2022
Overwhelmed!! #SooraraiPottru pic.twitter.com/fxGycj7h4Y
’நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய்க்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னத்திற்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்.
என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும், நன்றியும்... இந்த தேசிய விருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது. தேர்வுக் குழுவினருக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி..." என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேசிய விருது வாங்கும் முதல் பழங்குடியினப் பாடகராகிறார் ’நாச்சியம்மா’