ETV Bharat / entertainment

‘இழந்த வாழ்வை மார்க் ஆண்டனி படம் திருப்பி கொடுத்துள்ளது’ - எஸ்ஜே சூர்யா நெகிழ்ச்சி! - எஸ்ஜே சூர்யா பேச்சு

Mark Antony Success Meet: மார்க் ஆண்டனி படத்தின் சக்ஸஸ் மீட்டில் பேசிய நடிகர் எஸ்.ஜே. சூர்யா, ‘இந்த படத்தின் மூலம்‌ நான் இழந்த வாழ்வில் 75 விழுக்காடு எனக்கு திரும்ப கிடைத்துவிட்டது’ என நெகிழ்ச்சியடைந்தார்.

actor-sj-surya-speech-in-mark-antony-success-meet
இழந்த வாழ்வை மார்க் ஆண்டனி படம் திருப்பி கொடுத்துள்ளது’ - எஸ்ஜே சூர்யா நெகிழ்ச்சி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 6:21 PM IST

Updated : Sep 21, 2023, 11:01 PM IST

மார்க் ஆண்டனி சக்ஸஸ் மீட்டில் பேசிய எஸ்ஜே சூர்யா

சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் வெளியிட்ட இடமெங்கும் திருவிழா போல ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றது.

  • After all the hardwork, blood, sweat, pain, injuries near to death experiences in the last one year, not just from me but from the entire team who belong to #WorldOfMarkAntony, we hav almost reached the d day sep 15th tomorrow to showcase an out of the box time travel gangster… pic.twitter.com/oU9Fb8WOTD

    — Vishal (@VishalKOfficial) September 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில், இப்படம் இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பு பெரிதும் பேசப்பட்டன. விஷாலின் அப்பா, மகன் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் வெளியிடப்பட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு மற்றும் நல்ல வசூல் கிடைத்துள்ளது.

இதனை கொண்டாடும் வகையில், இன்று (செப்.21) மார்க் ஆண்டனியின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் வினோத் குமார், நிழல்கள் ரவி, இப்படத்தில் சில்க் வேடத்தில் நடித்த விஷ்ணுப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்கத்தில் விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, விழாவில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “படத்தை முதலில் சொல்லும்போது நான் வயதான கதாபாத்திரம் என்று சொன்னதால் கதை கூட கேட்காமல் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இப்போது தான் எப்படியோ இந்த நிலைக்கு வந்துள்ளேன். இதில், வயதான கெட்டப்பா என்று நினைத்து மறுத்துவிட்டேன்.

ஆனால், மாநாடு படத்தின் டப்பிங் பணியை முடித்துவிட்டு வெளியே வரும்போது விஷாலை பார்த்தேன். அவர் நல்ல கதை என்று சொன்னார். அதன்பின்பு, எனக்கும் சரியான கதாபாத்திரம் வேண்டுமென்று நினைத்ததால் ஒரு 20 நாள்கள் நேரம் எடுத்துக்கொண்டு வந்து கதையை சொன்னார்.

நியூ, அன்பே ஆருயிரே திரைப்படங்கள் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்திருந்தது. நியூ திரைப்படத்தை நான் 1 கோடி ரூபாய்க்கு விற்றேன். கடவுள் எனக்கு அப்போது கொடுத்ததற்கெல்லாம் நான் எப்படி இருந்திருக்க வேண்டும். ஆனால், என் வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறியது.

பின்னர், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘இறைவி’ திரைப்படம் மூலமாக என் வாழ்க்கை மாறியது. அதன் மூலம் ஒவ்வொரு இயக்குநர்களுடன் பணிபுரிந்து நடித்து இன்று மறுபடியும் மேலே வந்துள்ளேன். தொடர்ந்து, மார்க் ஆண்டனி படத்தின் மூலம்‌ அப்போது இழந்தவற்றில், 75 விழுக்காடு எனக்கு திரும்ப கிடைத்துவிட்டது” என்றார்.

இதையும் படிங்க: Thiru.Manickam first look: சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

Last Updated : Sep 21, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.