சமீபத்தில் வெளியான ஹிப்-ஹாப் ஆதியின் 'அன்பறிவு' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஷிவானி ராஜசேகர் 'மிஸ் இந்தியா' போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
இவர் ஏப்.30ஆம் தேதியன்று ‘ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு’ என அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது ‘மிஸ் இந்தியா’ கிரீடத்திற்காகப் போட்டியிடும் 31 போட்டியாளர்களில் ஒருவராகப் போட்டியிட உள்ளார்.
இவர், நடிகர்கள் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ராஜசேகர் ஆகியோரின் மூத்த மகளாவார். இவர் சமீபத்தில் கதாநாயகியாக நடித்து வெளியான ‘அன்பறிவு’ திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றார். மேலும், இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உள்ளது.
இதையும் படிங்க: ஃபேண்டசி ராம்-காம் படத்தில் நடிக்கும் ’அகில உலக சூப்பர் ஸ்டார்’..!