ETV Bharat / entertainment

ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் : Y - plus பாதுகாப்பு வழங்கி மகாராஷ்டிரா அரசு உத்தரவு!! - jawaan collections

Y - plus protection for shahrukh khan: நடிகர் ஷாருக்கானுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அவருக்கு Y - plus பாதுகாப்பு வழங்கி மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது

Shah Rukh Khan
Shah Rukh Khan
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 2:50 PM IST

ஹைதராபாத்: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு பல்வேறு வகையில் அச்சுறுத்தல் ஏற்படுவதால் மகாராஷ்டிரா அரசு அவருக்கு Y - plus பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஷாருக்கான் சமீபத்தில் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஷாருக்கானுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. ஷாருக்கானின் Y - plus பாதுகாப்பு படையில் 6 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளும், 5 ஆயுதம் ஏந்திய காவலர்களும் உள்ளனர்.

கொலை மிரட்டல் போன்ற அதிகமான அச்சுறுத்தல் வரும் பிரபலங்களுக்கு Y - plus பாதுகாப்பு வழங்கப்படும். அந்த Y - plus பாதுகாப்பு படையில் 6 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளும், 5 ஆயுதம் ஏந்திய காவலர்களும் மூன்று ஷிப்ட்களுக்கு சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவர். அந்த வகையில் ஏற்கனவே நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னாய் ரவுடி கும்பலால் ஏற்பட்ட அச்சுறுத்தலால் Y - plus பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமிதாப் பச்சன், அமீர் கான், அக்‌ஷய் குமார், அனுபம் கேர் ஆகியோருக்கு Y - plus பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன், அமீர் கான், அக்‌ஷய் குமார், அனுபம் கேர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் மூன்று தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மூன்று ஷிப்ட்களுக்கு வாரத்தில் ஏழு நாட்களும் பணியில் இருப்பர். முன்னதாக ஷாருக்கானுக்கு பாதுகாப்பில் 2 காவலர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 11 காவலர்கள் அடங்கிய Y - plus பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அக்.,5ஆம் தேதி மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சகம் சீனியர் காவல் அதிகாரிகள் மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில், ”ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் உயர்நிலை குழு பரிந்துரை மற்றும் மறு ஆய்வுக் குழு முடிவு வரும் வரை ஊதிய அடிப்படையில் ஷாருக்கானுக்கு Y - plus பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது".

இந்நிலையில், அரசு உத்தரவையடுத்து நடிகர் ஷாருக்கானுக்கு Y - plus பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சீனியர் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். ஷாருக்கான் சமீபத்தில் நடித்து வெளியான ஜவான் திரைப்படம் ரூ.1103.27 கோடி வசூல் செய்துள்ளது. தற்போது ஷாருக்கான் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிகை டாப்ஸியுடன் டங்கி படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ரசிகர்கள் மத்தியில் குவியும் ஆதரவு.. 'இறுகப்பற்று' திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.