ETV Bharat / entertainment

"நான் படிக்கவே இல்லை"... நடிகர் சந்தானம் செய்தியாளர்களிடம் கலகல பேச்சு! - பள்ளி நினைவுகளை பகிர்ந்த சந்தானம்

அண்ணா நகரில் தனியார் பள்ளியில் நடைபெற்ற கலை, கலாச்சார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகர் சந்தானம் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடம் தனது பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

actor
actor
author img

By

Published : Oct 30, 2022, 7:55 PM IST

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள எஸ்பிஓஏ பள்ளியில் கலை மற்றும் கலாசார நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் 50 தனியார் பள்ளிகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நகைச்சுவை நடிகர் சந்தானம் கலந்து கொண்டார். தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு நடிகர் சந்தானம் பரிசுக்கோப்பைகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய சந்தானம், மாணவர்களிடையே தனது பள்ளிக்கால பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். தாம் பள்ளிப்பருவத்தில் ஒரு பெண்ணை மிகவும் தீவிரமாக காதலித்ததாகவும், அந்த பெண் தனக்கு படிப்பு சுத்தமாக வரவில்லை என்ற காரணத்தினால் தன்னை வேண்டாம் என மறுத்ததாகவும் தெரிவித்தார்.

அதனால் நன்றாகப் படித்து அந்தப் பெண்ணை காதலை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்பதற்காகவே வைராக்கியத்துடன் படித்து எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாகவும், ஆனால் தான் காதலித்த அந்தப் பெண் எட்டாம் வகுப்பில் தோல்வி அடைந்துவிட்டதாகவும் கூறினார்.

இதுபோன்ற மாணவர்களின் தனித்திறன்களைப் பார்க்கும்போது தனக்கு மகிழ்ச்சியாக உள்ளதாகவும், பிற்காலத்தில் இவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும், திரைத்துறையிலும் இவர்கள் சிறந்து விளங்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தானம், 'இன்றைய மாணவர்களின் தனித்திறமைகளை பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. இன்றைய மாணவர்களின் பாடத்திட்டம் மிகவும் கடினமாக இருக்கிறது' என்றார்.

உங்களுக்கு பாடத்திட்டங்கள் எவ்வாறு இருந்தது? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "நான் சுத்தமாக படிக்கவே இல்லை" என்று கலகலப்பாகப் பதில் கூறிவிட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: இதுவும் கடந்து போகும்... மயோசிடிஸ் தோல் நோய்... சமந்தா உருக்கமான பதிவு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.