ETV Bharat / entertainment

"சாட்டர்டே இஸ் கம்மிங்கு..." - முதல்முறையாக சொந்தக் குரலில் பாடல் பாடிய சந்தானம்! - முதல்முறையாக சொந்த குரலில் பாடிய சந்தானம்

"கிக்" படத்திற்காக நடிகர் சந்தானம் முதன்முறையாக தனது சொந்தக் குரலில் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

Actor
Actor
author img

By

Published : Oct 6, 2022, 6:27 PM IST

சென்னை: பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் "கிக்". இப்படத்தில் தன்யா ஹோப், ராகினி திவேதி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். விளம்பரத்துறையில் பணிபுரியும் நாயகனும் நாயகியும் எலியும் பூனையுமாக மோதிக் கொள்வதுதான் படத்தின் கதை. சென்டிமென்ட், டிராமா, நகைச்சுவை என எல்லாம் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தின் முதல் பாடலுக்கான விளம்பர வீடியோ இன்று(அக்.6) வெளியாகியுள்ளது. அதில் "சாட்டர்டே இஸ் கம்மிங்கு... (Saturday is cominguu)" என்று ஆரம்பிக்கும் பாடலை, முதல் முறையாக நடிகர் சந்தானம் தனது சொந்தக் குரலில் பாடியிருக்கிறார்.

இப்பாடலை கவிஞர் விவேகா எழுதியிருக்கிறார். இப்பாடலின் முழு வரிகளுக்கான வீடியோ அக்டோபர் 10ஆம் தேதி மாலை 6.03 மணிக்கு வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க:கோமாளி பட இயக்குனரின் “லவ் டுடே” பட ட்ரெய்லர் வெளியானது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.