ETV Bharat / entertainment

சீரியல் நடிகையை கரம் பிடித்தார் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி! - today latest news in tamil

Redin Kingsley Sangeetha Marriage: தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லிக்கும், சீரியல் நடிகையான சங்கீதாவுக்கு இன்று (டிச.10) திருமணம் நடைபெற்றுள்ளது.

Redin Kingsley Marriage
சீரியல் நடிகையை கரம் பிடித்தார் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 4:12 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தற்போது பிஸியாக இருந்து வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நடனக் கலைஞரான இவர் அஜித் நடித்த "அவள் வருவாளா" என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அதன் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரை இயக்குநர் நெல்சன், தான் இயக்கிய "வேட்டை மன்னன்" என்ற படத்தில் நடிக்க வைத்தார். சிம்பு நடிப்பில் உருவாக இருந்த அந்த படம் இடையிலேயே கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நயன்தாராவை வைத்து நெல்சன் இயக்கிய "கோலமாவு கோகிலா" என்ற படத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து சந்தானம் நடித்த "ஏ1" படத்திலும் நடித்திருந்தார்.‌ பின்னர் சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இயக்கிய "டாக்டர்" படம் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக ஏராளமான படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ரஜினியின் "அண்ணாத்த", விஜய் நடித்த "பீஸ்ட்" உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவரது வசனம் பேசும் உடல்மொழி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. "டாக்டர்" படத்தில் இவரது நடிப்பும் நகைச்சுவையும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது எனலாம்.

இந்த நிலையில் இவருக்கும் சீரியல் நடிகையான சங்கீதாவுக்கு இன்று (டிச.10) திருமணம் நடந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடன இயக்குநர் சதீஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

நடிகை சங்கீதா, விஜய் நடித்த "மாஸ்டர்", "எல்.கே.ஜி", "பாரிஸ் ஜெயராஜ்" உள்ளிட்ட படங்களிலும் ஒருசில சின்னதிரை தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர்களது திருமணத்திற்குத் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பட்ஜெட் முக்கியமல்ல நல்ல கதை தான் மக்களிடம் வரவேற்பை பெறுகிறது: நடிகர் ஹரிஷ் கல்யாண் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.