ETV Bharat / entertainment

‘கப்ஜா’ பட டீஸரை வெளியிட்டார் நடிகர் ராணா! - Kannada film industry

கன்னட நடிகர் உபேந்திராவின் ‘கப்ஜா’ பட டீஸரை நடிகர் ராணா வெளியிட்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 18, 2022, 12:20 PM IST

சென்னை: கன்னடத்திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது.

நடிகர் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று இப்படத்தின் டீஸரை ‘பாகுபலி’ படப்புகழ் நடிகர் ராணா டகுபதி வெளியிட்டார். டீஸர் வெளியான குறுகிய கால அவகாசத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கன்னடத் திரையுலகிலிருந்து 'கேஜிஎஃப் 1 & 2 ', '777 சார்லி', 'விக்ராந்த் ரோணா' என நல்ல படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலைக் குவித்து வருகிறது. இதனால், ஒட்டுமொத்த இந்தியத் திரையலகின் கவனமும் தற்போது கன்னடத்திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது.

இங்கு நட்சத்திர நடிகர்களாக ரசிகர்களின் பேராதரவுடன் உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் 'கப்ஜா' படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்தத்திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.

'கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர்' ஜானரில் இப்படம் தயாராகியிருக்கிறது. இந்தப் படத்தை ஸ்ரீசித்தேஸ்வரா என்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சந்திரசேகர் தயாரித்திருககிறார்.

இந்தப்படத்தில் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்புடன் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ் ராஜ் , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கிறார்கள்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ஏ.ஜெ. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு 'கேஜிஎஃப்' படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை மகேஷ் ரெட்டி கவனிக்க, சண்டைக்காட்சிகளை ரவி வர்மா, விஜய், விக்ரம் மோர், வினோத் என நான்கு சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள்.

கன்னடத்திரை உலகின் முன்னணி இயக்குநரான ஆர். சந்துரு இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'கப்ஜா' திரைப்படத்தின் டீஸர், நடிகர் உபேந்திராவின் பிறந்தநாளையொட்டி இணையத்தில் வெளியிடப்பட்டது.

இதனை கன்னடத்திரையுலக ரசிகர்களும் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். டீஸருக்கு கிடைத்து வரும் பேராதரவைக் கண்டு உற்சாகமடைந்த படக்குழுவினர், 'கப்ஜா' படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்' எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''1947ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக்கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரமாண்டமான படைப்பு தான் ‘கப்ஜா’.

இந்தப் படத்திற்கு ‘தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா’ எனும் டேக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல், உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க: குருவாயூர் கோயிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.1.5 கோடி காணிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.