கோயம்புத்தூர்: சின்னத்திரை நகைச்சுவை நட்சத்திரமான ’குக் வித் கோமாளி’ புகழ் தனது நீண்ட நாள் காதலியான பென்சியை திருமணம் செய்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் நேற்று(செப்.1) வெளியாகின. தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான புகழ் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.
சில திரைப்படங்களிலும் கமிட்டாகி உள்ள புகழ் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், பென்சியை திருமணம் செய்து கொள்ள இருப்பது குறித்து டிவி நிகழ்ச்சியிலும் பேசியிருந்தார். புகழ் - பென்சி திருமணம் கோயிலில் நடந்ததாக புகைப்படங்கள் பரவி வருவதுடன், விரைவில் சின்னத்திரை நட்சத்திரங்கள் அனைவரையும் அழைத்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே புகழ் - பென்சி ஆகியோருக்கு கோவையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே பெரியார் படிப்பகத்தில் பதிவு திருமணம நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் கேட்ட போது , ஒரு வருடத்திற்கு முன்பே திருமணம் நடத்தி வைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நடிகர் பிரசாந்த் மீது சுவிட்சர்லாந்த் விமான நிலைய பெண் ஊழியர் பணமோசடிப் புகார்