ETV Bharat / entertainment

நடிகர் பிரபுவின் மகளை கரம் பிடிக்கும் மார்க் ஆண்டனி பட இயக்குநர்! - பிரபு மகள் ஐஸ்வர்யா

Prabhu daughter marriage: மார்க் ஆண்டனி பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

actor prabhu daughter marriage with adhik ravichandran
நடிகர் பிரபுவின் மகளுக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் திருமணம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 11:35 AM IST

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும், மூத்த நடிகருமான பிரபு ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்து, தற்போது அப்பா கதாபாத்திரத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பிரபுவுக்கு விக்ரம் பிரபு என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.

பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது வெளியான 'இறுகப்பற்று' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன், ஜிவி பிரகாஷ் குமார் நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்து 'பகீரா' என்ற படத்தை இயக்கினார்.

இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான இப்படம், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது. தற்போது, அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இன்னும் அதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ஆதிக் ரவிசந்திரனுக்கும், பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்றும், அடுத்த மாதம் 15ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரபு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய லோகேஷ் கனகராஜ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.