ETV Bharat / entertainment

காமன்வெல்த் போட்டிகளில் வென்ற வீரர்களை வாழ்த்திய பிரபாஸ்..!

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இந்தியாவைச் சேர்ந்த வீரர்களுக்கு தெலுங்கு நடிகர் பிரபாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமென்வெல்ட் போட்டிகளில் வென்ற வீரர்களை வாழ்த்திய பிரபாஸ்..!

author img

By

Published : Aug 11, 2022, 10:23 PM IST

இங்கிலாந்தில் நடைபெற்ற 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, பதக்கங்களை வென்றெடுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தெலுங்கு நடிகர் பிரபாஸ் வாழ்த்துகளுடன் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.

'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் தான் நடிகர் பிரபாஸ். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இவரை கோடிக் கணக்கிலான பார்வையாளர்கள் பின் தொடர்கிறார்கள்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்ஹாம் எனும் இடத்தில் நடைபெறும் 70-க்கும் மேற்பட்ட காமன்வெல்த் நாடுகள் கலந்து கொண்ட 22 ஆவது காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இவர், இந்தியா சார்பில் இடம்பெற்ற வீரர்களின் பதக்க பட்டியலின் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ''எங்களைப் பெருமைப்படுத்தியதற்காகவும், நமது தேசத்திற்கு பெருமை சேர்த்ததற்காகவும் அனைத்து சாம்பியன்களுக்கும் வாழ்த்துகள். உங்களுடைய அர்ப்பணிப்பிற்கும், உழைப்பிற்கும் நன்றி!!'' எனப் பதிவிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: ஐந்து நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்த 'சீதா ராமம்'!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.