ETV Bharat / entertainment

National Film Awards 2023: ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது - இயக்குநர் பார்த்திபன் நெகிழ்ச்சி!

69 ஆவது தேசிய விருது பெறும் படங்களின் பட்டியலை மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், ‘மாயவா தூயவா’ என்ற பாடல் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 9:01 PM IST

சென்னை: 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஆக.24) அறிவிக்கப்பட்டது. தமிழில் கடைசி விவசாயி திரைப்படம் சிறந்த பிராந்திய மொழி பிரிவில் விருது பெற்றது. அதேபோல் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் ‘மாயவா தூயவா’ பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் வெளியிட்டுள்ள ஆடியோவில், “நிலவில் சந்திரயான் இறங்கும்பொழுது இஸ்ரோவில் உள்ள விஞ்ஞானிகள் மட்டுமல்ல அந்த கட்டடத்தில் பணிபுரியும் அனைவருமே பெருமைப்பட்டு இருப்பார்கள், மகிழ்ந்திருப்பார்கள்.

அப்படி பெருமைக்குரிய தேசிய விருது இரவின் நிழல் படத்தில் ஸ்ரேயா கோஷல் ‘மாயவா தூயவா’ என்ற பாடலுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட பொழுது முழு முதல் காரணமான விஞ்ஞானியான ஏ.ஆர். ரகுமானுக்கு எனது மனப்பூர்வமான நன்றி. இஸ்ரோவில் பணிபுரிந்த நிறைய ஊழியர்களில் ஒருவன் போல அந்த படத்திற்காக உழைத்த ஊழியர்களில் ஒருவனாக நானும் மகிழ்கிறேன் பெருமைப்படுகிறேன்.

ரஹ்மானுடன் படம் பண்ண வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய காத்திருப்பு. அதற்குப் பலனாக இரவின் நிழல் படத்தில் கிடைத்த மரியாதை கிட்டத்தட்ட 120 இன்டர்நேஷனல் அவார்டுகள் எல்லாமே கிடைத்தும் கூட நம் தேசிய விருது அது பற்றின பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது.

அதில் என் படத்திற்கு பெயர் இருப்பது மகிழ்ச்சி; என் பெயர் இருப்பது மகிழ்ச்சி. இதற்கு காரணமாக இருந்த ஸ்ரேயா கோஷல், படத்தில் பணிபுரிந்தவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 69-வது தேசிய விருது.. விருதுபெற்ற படங்கள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.