ETV Bharat / entertainment

“கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க நான் ஒன்றும் அண்ணாமலை இல்லை” - மன்சூர் அலிகான்

Mansoor Ali Khan accuses Censor Board: தன் சொத்தை விற்று சொந்த பணத்தில் படம் எடுத்தால் சென்சார் போர்டு அதை கெடுக்க முயல்கின்றனர் என மன்சூர் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார்.

actor Mansoor Ali Khan accuses Censor Board for their conditions to his movie sarakku
மன்சூர் அலிகான் வேதனை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 2:19 PM IST

மன்சூர் அலிகான் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: மன்சூர் அலிகான் தயாரிப்பில் உருவாகியுள்ள சரக்கு திரைப்படத்தின் சென்சார் தொடர்பாக, மன்சூர் அலிகான் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (அக்.21) செய்தியாளர்களைச் சந்தித்தார். இது தொடர்பாக அவர் பேசியபோது, “இந்த சரக்கு படத்திற்காக எனது சொத்தை விற்று படத்தை எடுத்துள்ளோம்.

சென்சார் குழுவினர் படத்தைப் பார்த்தார்கள். பின்பு நீண்ட லிஸ்ட் அளித்து, அதில் இருக்கும் காட்சிகளை அகற்ற வேண்டும் என்றும், முக்கியமாக அதானி என்று பெயர் இருக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என கூறினார்கள். ஆனால், நான் அதற்கு மறுத்து விட்டேன். மேலும், வெற்றிமாறன் எடுத்த விடுதலை படத்தில் கற்பனை கதை என போட்டது போல், இந்த திரைப்படத்திலும் வைக்கின்றோம் என கூறியதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.

திருநங்கைகளை மேம்படுத்துவதற்கு வைத்திருந்த ஒரு பாடலை, கவர்ச்சியாக உள்ளது என்று சொல்லி அதை எடுக்க வேண்டும் என கூறினர். கூடங்குளம் மற்றும் இலங்கைத் தமிழர் படுகொலை தொடர்பாக இருந்த பாடல் வரிகளை அகற்ற வேண்டும் என கூறினர். இந்த சம்பவங்கள் தொடர்பாக வேறு யார்தான் கேள்வி எழுப்புவார்கள்?

மாநில அரசில் இருக்கும் மது பழக்கத்திலிருந்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும்படி படம் எடுத்துள்ளோம். படத்தில் இருக்கும் ஒரு கதாபாத்திரம் ரம்மி விளையாடக் கூடாது எனக் கூறி இருப்பதை அகற்ற கூறுகின்றனர். மக்களின் ரத்தத்தை குடித்து ரம்மி, பணம் பிடுங்குகிறது. தமிழ்நாடு அரசு, அதானி, அம்பானி, டாஸ்மாக் பற்றி பேசக் கூடாது என கூறுகின்றனர்.

காவாலா பாடலை எப்படி அனுமதித்தனர்? நான் 1987-ஆம் ஆண்டு முதல் சினிமாத் துறையில் இருக்கின்றேன். எனது வீட்டை விற்று நான் படம் நடித்தால், அதை சென்சார் மூலம் கெடுக்க முயல்கின்றனர். நான் சமூக சீர்திருத்தத்திற்காக இந்த படத்தை எடுத்துள்ளேன். சிறிய படங்களை இயக்கி கொண்டு வருவது வீண் என்று விஷால் கூறுவது முற்றிலும் தவறு. விஷால் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

நடிகர் சங்கத்தில் லட்சக்கணக்கானவர்கள் வேலை இன்றி உள்ளனர். அவர்களுக்கு எப்படி வேலை அளிப்பது என நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து கொண்டு, சிறிய படங்களை எடுக்க வேண்டாம் எனக் கூறியது முற்றிலும் தவறு” என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மாற்றி மாற்றி கேள்வி எழுப்பியதற்கு, கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க நான் ஒன்றும் அண்ணாமலை கிடையாது என்ற அவர், பெரிய படங்களில் பல ஆபாசமான வன்முறைமிக்க காட்சிகள் உள்ளது. ஆனால் என் படத்தில் ஏதுமில்லைம் ஆனால் என் படத்தில் மீது புகார்கள் வைக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஜய்க்கு மிருக தோஷமா… ’லியோ’ திரைப்பட ரிசல்ட் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.