ETV Bharat / entertainment

ஓடிடியில் வெளியானது "தி லெஜண்ட்" திரைப்படம்! - சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடித்த "தி லெஜண்ட்" திரைப்படம், இன்று டிஸ்னி +ஹாஸ்டாரில் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Actor
Actor
author img

By

Published : Mar 3, 2023, 9:40 PM IST

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் ஜவுளி சாம்ராஜ்யம் நடத்தி வருபவர், லெஜண்ட் சரவணன். இவர் தமிழ் சினிமாவில் "தி லெஜண்ட்" என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து, நாயகனாக அறிமுகமான படம் 'தி லெஜண்ட்'.

இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப் பிரமாண்டமாக உருவானது. இதில் கதாநாயகியாக மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா நடித்திருந்தார். அதோடு விவேக், பிரபு, விஜயகுமார், யோகி பாபு, கோவை சரளா, நாசர் என தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விஞ்ஞானியான சரவணன், அறிவியல் ஆராய்ச்சி செய்து புதிய மருந்து ஒன்றை கண்டுபிடித்து சாதிக்கிறார். இதன் மூலம் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக பிரபலமாகிறார். பின்னர் தனது கிராமத்திற்குச் சென்று அங்குள்ள தங்களது மக்களுக்கு உதவும் வகையில் மருந்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். இவரது முயற்சிக்கு சில மருந்து நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆராய்ச்சியை ஒழிக்க முயற்சிக்கும் நிறுவனங்களை சரவணன் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் மற்றும் ஆக்சன் கலந்த இத்திரைப்படம், கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் பிரமாண்டமாக வெளியானது.

இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் நடித்திருந்தார். அவரது கடைசி படமாக இது அமைந்துள்ளது. விவேக்கை திரையில் பார்த்த ரசிகர்கள் கண்கலங்கினர். படத்தில் அவரது காமெடியை பார்த்துவிட்டு கண்ணீருடன் சிரித்துக்கொண்டு இருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ஓரளவுக்கு நன்றாக இருந்தன.

ஒரு முன்னணி நடிகருக்கு நிகரான ஓப்பனிங் இப்படத்திற்கு கிடைத்தது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அண்ணாச்சியின் சினிமா ஆசைக்கு சூப்பர் ஸ்டாரின் சிவாஜி படக்கதையை‌ சற்று மாற்றியமைத்து, பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம்தான், லெஜண்ட் என திரைத்துறையினர் விமர்சித்தனர். படத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தலா மற்றும் லெஜண்ட் சரவணன் இருவரின் ஜோடியை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர்.

அதேநேரம் உருவகேலி போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு லெஜண்ட் சரவணன் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டார் என்றுதான் கூற வேண்டும். இப்படம் சுமார் 40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படம் வெளியாகி பல மாதங்கள் கடந்தும் ஓடிடியில் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், தி லெஜண்ட் படம் இன்று(மார்ச்.3) டிஸ்னி +ஹாஸ்டாரில் வெளியாகியுள்ளது. இதனை லெஜண்ட் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக காத்திருந்த ரசிகர்கள் இந்த செய்தியைக் கேட்டு உற்சாகமடைந்துள்ளனர். இது தொடர்பாக ட்விட்டரிலும் பதிவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக தி லெஜண்ட் பட ஓடிடி வெளியீடு, சில மணித்துளிகள் ட்விட்டர் டிரெண்ட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள் தான் உருவாக்குகிறார்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.