தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பூமி. நடிகர் ஜெயம் ரவியின் 25-வது திரைப்படமாக வெளிவந்த பூமி திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியானது.
அடுத்ததாக மணிரத்தினத்தின் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் என்கிற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் மதுரையில் நடிகர் ஜெயம் ரவியின் தீவிர ரசிகரான செந்தில் என்பவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது வீட்டிற்கு சென்று ஜெயம் ரவி அஞ்சலி செலுத்தியுள்ளார். உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ஜெயம்ரவி அவர்களது உடன்பிறந்தவர்களின் படிப்பிற்கான மொத்த செலவையும் தானே ஏற்பதாக உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: யானை' ரிலீஸ் தேதி மாற்றத்துக்கு இப்படி ஒரு காரணமா?