ETV Bharat / entertainment

ஒரு படத்தை வெளியிடுவது மன‌ உளைச்சலை தருகிறது - நடிகர் பரத் ஆதங்கம்! - recent tamil cinema news

நடிகர் பரத்தின் 50 படமான 'லவ்' திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ளது, படத்தில் வாணி போஜன், சுயம் சித்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

'லவ்' திரைப்படத்தின்இசை வெளியிட்டு விழா
'லவ்' திரைப்படத்தின்இசை வெளியிட்டு விழா
author img

By

Published : Jul 14, 2023, 10:59 PM IST

சென்னை: RP Films தயாரிப்பில், RP பாலா இயக்கத்தில், நடிகர்கள் பரத் - வாணி போஜன் நடிப்பில், காதல், த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள படம் "லவ்". வரும் ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற மூத்த பத்திரிக்கையாளர்கள் இணைந்து "லவ்" படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.

விழாவில் பங்கேற்ற படக்குழுவினர் பலர் பேசினர். அப்போது பேசிய ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா, "ஒரு டீமோட பெரிய சக்ஸஸ் என்பது அந்த டீம் வெற்றி பெற்று, மீண்டும் அதே டீம் சேர்ந்து வேலை பார்ப்பது தான். அது போல் "லவ்" படம் வெற்றி பெற்று இதே டீம் மீண்டும் வேலை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் அனைவருக்கும் நன்றி" என கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய நடிகை சுயம் சித்தா பேசியதாவது, "எனக்குத் தமிழ் கொஞ்சமாகத்தான் தெரியும். கோவிடுக்கு பிறகு வந்த முதல் படம் இது. எனக்கு மிகவும் நெருக்கமான படம், பட வாய்ப்பு தந்த RP பாலா சாருக்கு நன்றி, படத்திற்கு ஆதரவு தாருங்கள்" என்று பேசி நன்றி சொல்லி அமர்ந்தார்.

தொடர்ந்து நடிகர் டேனியல் பேசும் போது, "இப்போதெல்லாம் யாரும் கதை சொல்வதில்லை, போன் செய்து, என்ன லுக்? ஃப்ரியா? என கேட்டுவிட்டு, ஷூட்டிங் கூப்பிட்டு விடுகிறார்கள். டெய்லி பேட்டா போல் வேலை வருகிறது. இப்போதைய சினிமா அந்த மாதிரி மாறிவிட்டது. 'லவ்' படம் நன்றாக வந்துள்ளது இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி" என பேசினார் நடிகர் டேனியல்.

பின் நடிகை வாணி போஜன் பேசியதாவது, "நான் நிறையப் படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் சில படங்களே மனதிற்கு முழு திருப்தியை கொடுக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. இந்தப் படத்தில் நானும் பரத்தும் நிறைய சண்டைகள் போட்டுள்ளோம், அடிகளும் பட்டது. ஆனால் அது படத்திற்காக மட்டும் தான், படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி" என தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

இப்படத்தின் இயக்குநர் RP பாலா, "படம் ஜூலை 28 ஆம் தேதி வருகிறது. இப்போது படத்தை எடுப்பதை விட படத்தை ரிலீஸ் செய்வது கடினமாக இருக்கிறது. இப்படத்தின் டீம் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். பரத் படம் முழுவதும் பெரும் உறுதுணையாக இருந்தார். முத்தையா சார் இன்று வரை இப்படத்திற்கு வேலை செய்கிறார். அவர் படம் போல் பார்த்துக் கொள்கிறார். அவருக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இசையமைப்பாளர் மரைக்காயர் படத்தில் வேலை செய்த போது, இந்தப்படம் பற்றிச் சொன்னேன். எனக்காக இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். டேனியல் மிகச் சிறந்த நண்பர். பரத் என்னை நம்பி 50வது படம் தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது, உங்களுக்குப் பிடிக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி" என இயக்குநர் RP பாலா பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய நடிகர் பரத், "இங்கு எனது 50 வது படத்தில் உங்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியது மகிழ்ச்சி. என் திரை வரலாற்றில் மோசமான படங்கள் செய்த போதும், நீ நல்லா பண்ணியிருக்க, நல்லா பண்ணு, நல்லா வருவ என எனக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் உங்களுக்கு நன்றி. இந்தப் பயணம் மிகப்பெரியது. ஷங்கர் சார், ஏ.எம் ரத்னம் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

படம் செய்யும் போது மிக உற்சாகத்துடன் வேலை பார்க்கிறோம். ஆனால் படம் ரிலீஸ் என வரும் போது பெரும் பிரச்சனைகள் வந்து நிற்கிறது, மன உளைச்சல்கள் தருகிறது. சினிமா இரண்டாகப் பிரிந்து போயிருக்கிறது. ஆனால் நான் எப்போதும் என் வேலையை சிறப்பாக செய்து வருகிறேன், அது தான் முக்கியம். இந்தப் படம் எங்கேயும் உங்களுக்கு போரடிக்காது, ஒரு சிறப்பான படம் பார்க்கும் அனுபவம் தரும் என் இயக்குநர், தயாரிப்பாளர் RP பாலா சாருக்கு நன்றி, படக்குழுவினருக்கு நன்றி" என்று பேசினார்.

இதையும் படிங்க: மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில், ''கிடா'' திரைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.