சென்னை: ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'மிஷன் சாப்டர்-1'. இப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வருகிற 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் விஜய், அருண் விஜய், இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
-
Rev up your excitement! 🤩 Mission Chapter-1 trailer is OUT NOW! ▶️ Brace yourselves for the ultimate action extravaganza! 🔥
— Lyca Productions (@LycaProductions) January 5, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
▶️ https://t.co/oIeSDVOHnC#MissionChapter1 in cinemas near you from January 12th, 2024! 📽️✨@arunvijayno1 Director #Vijay @gvprakash @iamAmyJackson… pic.twitter.com/ZbyaxgLTVI
">Rev up your excitement! 🤩 Mission Chapter-1 trailer is OUT NOW! ▶️ Brace yourselves for the ultimate action extravaganza! 🔥
— Lyca Productions (@LycaProductions) January 5, 2024
▶️ https://t.co/oIeSDVOHnC#MissionChapter1 in cinemas near you from January 12th, 2024! 📽️✨@arunvijayno1 Director #Vijay @gvprakash @iamAmyJackson… pic.twitter.com/ZbyaxgLTVIRev up your excitement! 🤩 Mission Chapter-1 trailer is OUT NOW! ▶️ Brace yourselves for the ultimate action extravaganza! 🔥
— Lyca Productions (@LycaProductions) January 5, 2024
▶️ https://t.co/oIeSDVOHnC#MissionChapter1 in cinemas near you from January 12th, 2024! 📽️✨@arunvijayno1 Director #Vijay @gvprakash @iamAmyJackson… pic.twitter.com/ZbyaxgLTVI
இந்நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பேசுகையில், “ பொங்கலுக்கு என்னுடைய 2 படங்கள் வருகிறது . இரண்டுமே வெற்றி பெற வேண்டுகிறேன். அருண் விஜய் உடன் தொடர்ந்து 3 படங்களுக்கு இசை அமைக்கிறேன். ஏ.எல் விஜய் உடன் கை கோர்க்கும் படங்கள் எல்லாம் எனக்குப் பக்க பலமாக இருந்திருக்கிறது. இந்த நேரத்தில் நான் நா. முத்துக்குமாரை மிஸ் பண்ணுகிறேன். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் அருண் விஜய் பேசியபோது, “ என்னுடைய படங்களில் முதல்முறையாக ஒரு படம் பண்டிகையில் வெளியாகிறது. நான் இதுவரை நடித்த படங்களில் அதிகளவில் பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம் இந்த படம். நாலரை ஏக்கர் அளவில் இந்த படத்திற்குப் படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டு பெரிய செலவில் எடுக்கப்பட்ட படம்” என்றார்.
மேலும், படம் இங்கிலாந்தில் எடுத்துக் கொண்டிருந்த போது, படம் ஆரம்பித்த ஒருவார காலத்திற்குள் ராணி எலிசபெத் இறந்துவிட்டார்கள், அதன்பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தோம். பின்பு போராடி ஒரு வழியாக முடித்துவிட்டோம். என் படத்துடன் இரண்டு படங்கள் வெளியாகிறது, அந்த படங்களும் வெற்றிபெற வேண்டும். கேப்டன் மில்லர், அயலான் மற்றும் என்னுடைய படம் மிஷன் வெற்றிபெற வேண்டும் என்றார்.
படம் குறித்து இயக்குநர் ஏ.எல்.விஜய் பேசுகையில், “படம் பெரிய பொருட் செலவில் எடுத்து விட்டோம், ஆனால் அதைச் சரியான முறையில் வெளியிட வேண்டும் என்று நினைத்து லைகாவிடம் தொடர்பு கொண்டு படம் பார்க்க வைத்தோம், அவர்கள் வெளியிட முடிவு செய்த பிறகு தான் இந்த படம் அடுத்த கட்டத்திற்குச் சென்றது. இரண்டு ஜெயின்ட்டுகளுடன் இந்த படத்தை வெளியிடுகிறோம். நடிகை எமி ஜாக்ஸனுக்கு 2.0 திரைப்படத்திற்குப் பிறகு இந்த படம் ஒரு கம் பேக்காக இருக்கும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: அழகை மட்டும் வைத்து சினிமாவில் நிலைக்க முடியாது.. கத்ரின கைஃபை புகழ்ந்த விஜய்சேதுபதி!