இயக்குநர் எச்.வினோத் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் ’துணிவு’. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் முக்கிய அப்டேட் நேற்று வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், காலை முதலே படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாப்பத்திரங்களை அறிமுகம் செய்யும் வகையில் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுவந்தன. இறுதியாக நடிகர் அஜித்தின் கதாப்பாத்திரம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், அஜித்தின் கதாபாத்திரம் குறித்த வெளியிடமால், ஆர்வத்தை தூண்டிய படக்குழு ட்ரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி இன்று மாலை 7 மணிக்கு படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. முன்னதாக, வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது. புத்தாண்டு டிரீட்டாக ரசிகர்களுக்கு ட்ரலைர் அமைந்துள்ளது.