தெலங்கானா: மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண் நடித்து கொரட்டலா சிவா இயக்கிய ‘ஆச்சார்யா’ படம் வருகிற 29ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டர், இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி.
இந்நிகழ்வில் பேசிய எஸ்எஸ் ராஜமெளலி : "சிரு சார். நீங்க நல்லா இருக்கீங்க. நல்லா டான்ஸ் பண்றீங்க. நல்லா நடிக்கிறீங்க, மெகா ஸ்டாராக இருந்தும் என் RRR ஹீரோ ராம் சரண்கிட்ட இருக்கிற கவர்ச்சி உங்களுக்கு இல்லை" என்று ராஜமௌலி சொல்ல, அந்த நகைச்சுவையான மேற்கோளைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.
மேலும் ”மகதீரா படப்பிடிப்பின்போது சிரஞ்சீவி சார், எந்த ஒரு பரிந்துரையையும் ராம் சரணிற்காக செய்ததில்லை. ராம்சரண் தானாகவே கற்றுக்கொண்டவர். தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டவர். இன்று இருக்கும் நிலைக்கு அவருடைய கடின உழைப்பு தான் காரணம்” என்று ராஜமெளலி புகழாரம் சூட்டியுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
பின்னர் பேசிய RRR படத்தின் தயாரிப்பாளர்
”படத்தின் இயக்குநர் கொரட்டலா சிவாவின் அமைதியான வெளிப்புறத்தைக் கண்டு ஏமாறாதீர்கள்; கொரட்டலா ஒரு சக்தி வாய்ந்தவர். நிறைய விஷயங்கள், மற்றும் மிகவும் பிரபலமான வெகுஜன இயக்குநர்களில் ஒருவர் " எனப் பேசினார்.
இதையும் படிங்க :நல்ல படங்கள் எந்த மொழியில் வந்தாலும் தமிழ் ரசிகர்கள் ஓட வைப்பார்கள் - உதயநிதி ஸ்டாலின்!