ETV Bharat / entertainment

Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் படத்தின் புதிய அப்டேட்! - சினிமா அப்டேட்

விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' (Dhruva Natchathiram) பல நாட்களாக திரைக்கு வராத நிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dhruva Natchathiram movie
துருவ நட்சத்திரம் படத்தின் புதிய அப்டேட்!
author img

By

Published : Mar 16, 2023, 7:07 AM IST

சென்னை: தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவரை போலவே இவரது படங்களும் மிகவும் ஸ்டைலாக இருக்கும். அது காதல் படங்களாகட்டும், ஆக்ஷன் படங்களாகட்டும். அவர் கடைசியாக சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கியிருந்தார். தற்போது கௌதம் மேனன் கடன் பிரச்னையில் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இயக்கத்தில் இருந்து நடிக்க வந்துவிட்டார் பலர் கூறுகின்றனர்.

சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் கௌதம் மேனன் நடித்திருக்கிறார். ஏன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனன் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் 'துருவ நட்சத்திரம்' (Dhruva Natchathiram). கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்டது.

இப்படத்தில் சிம்ரன், ராதிகா, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஸ், திவ்யதர்ஷினி என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சூர்யா. ஆனால் பல்வேறு காரணங்களால் அவர் நடிக்கவில்லை. அதன் பிறகு தான் விக்ரமை வைத்து கௌதம் மேனன் இயக்கினார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் டீசர், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருந்தது. ஆனால் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மட்டும் எஞ்சியிருந்த சமயத்தில், பொருளாதாரப் பிரச்னை காரணமாக இறுதிகட்ட பணிகள் தள்ளிப் போய் கொண்டே இருந்தது.

இப்போது வெளியாகும் அப்போது வெளியாகும் என்று தகவல் மட்டுமே வந்து கொண்டு இருந்தது. ஆனால் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் இம்முறையும் வழக்கம் போல் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது துருவ நட்சத்திரம் திரைப்படம் இந்த ஆண்டு மே மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகளை கௌதம் மேனன் தற்போது மேற்கொண்டு வருவதாகவும், சின்ன சின்ன வேலைகள் தான் மீதி உள்ளதாகவும், எனவே இந்த ஆண்டு மே மாதம் எப்படியும் படம் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கூறப்படுகிறது.

துருவ நட்சத்திரம் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது என்ற தகவலும் உலா வருகிறது. எனவே திட்டமிட்ட படி எப்படியும் வெளிவந்து விடும் என்கிறனர். மேலும் இப்படத்தில் விக்ரம் மிகவும் ஸ்டைலாக உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் படத்தின் டீசரும் வெளியாகி படத்தின்‌ மீதான எதிர்பார்பை குறையவிடாமல் செய்துள்ளன. இந்த முறை குறி தப்பாது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: 1 - 9ஆம் வகுப்பு வரையிலான தேர்வை முன்கூட்டியே நடத்த திட்டம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.