இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ’வாரிசு’. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசையில் சமீபத்தில் வெளியான ’ரஞ்சிதமே’ பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து வருகிறது.
விஜயின் படங்கள் வெளியாகிறது என்றாலே அதன் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். காரணம் விஜய் பேசும் பேச்சு. ’பீஸ்ட்’ படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில் ’வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டுவிழா எப்போது...? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், ’வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் மாதம் 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மாமன்னன் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை... - உதயநிதி ஸ்டாலின்