தமிழ்த்திரையுலகில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த பிரபல இயக்குநர், அட்லி. இவர் 'பாலிவுட் பாஷா' ஷாரூக்கானை கதாநாயகனாக வைத்து, அடுத்ததாக இந்திப் படம் ஒன்றை இயக்கிவருகிறார். கெளரிகான் தயாரிப்பில், இந்தப் புதிய படத்தை ரெட்சில்லீஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.
பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தின் தலைப்பை தற்போது ரெட்சில்லீஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ”ஜவான்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சமூக வலைதளப்பக்கங்களில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் பெயரை வெளியிடும் நோக்கத்தில் யூ-ட்யூபில் ஒன்றரை நிமிட டைட்டில் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
வெளியிட்டுள்ள டைட்டில் வீடியோவில் ’ஜவான்’ அடுத்த ஆண்டான 2023இல் ஜூன் 2ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
An action-packed 2023!!⁰Bringing #Jawan to you, an explosive entertainer in cinemas 2nd June 2023.⁰In Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada.
— Shah Rukh Khan (@iamsrk) June 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
@gaurikhan @Atlee_dir @RedChilliesEnt https://t.co/3MWGKNwAwZ
">An action-packed 2023!!⁰Bringing #Jawan to you, an explosive entertainer in cinemas 2nd June 2023.⁰In Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada.
— Shah Rukh Khan (@iamsrk) June 3, 2022
@gaurikhan @Atlee_dir @RedChilliesEnt https://t.co/3MWGKNwAwZAn action-packed 2023!!⁰Bringing #Jawan to you, an explosive entertainer in cinemas 2nd June 2023.⁰In Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada.
— Shah Rukh Khan (@iamsrk) June 3, 2022
@gaurikhan @Atlee_dir @RedChilliesEnt https://t.co/3MWGKNwAwZ
இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பிரியாமணி, யோகிபாபு, உள்ளிட்ட தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். நயன்தாரா முதன்முறையாக பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நயன்தாரா விசாரணை அலுவலராகவும், ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தன்னைத் தானே விரும்புபவள்.. இவள்..!