ETV Bharat / elections

அமமுக வேட்பாளர் தாக்குதலுக்கு தினகரன் கண்டனம் - மக்களவை தேர்தல்

சென்னை: ஓசூரில் அமமுக வேட்பாளரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டம் தெரிவித்துள்ளார்.

அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
author img

By

Published : Apr 14, 2019, 5:00 PM IST

இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'தமிழகம் எங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகி வருவதை துரோகிகளாலும், எதிரிகளாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வன்முறையைக் கையிலெடுத்து அதன் மூலம் நம்முடைய இயக்கத்தில் இருக்கிற ஜெயலலிதா அவர்களின் உண்மைத் தொண்டர்களை அச்சுறுத்த நினைக்கிறார்கள்.

அப்படித்தான் ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் புகழேந்தி அவர்களுடைய பரப்புரை வாகனத்தை அடித்து உடைத்திருக்கிறார்கள்.

தேன்கனிக்கோட்டை சாலையில் வைத்து, இரு சக்கர வாகனத்தில் கையில் நீண்ட கத்திகளோடு வந்தவர்கள் இத்தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.

அதிர்ஷ்டவசமாக வேட்பாளர் அப்போது வாகனத்தில் இல்லாததால், உயிர் தப்பி இருக்கிறார். தோல்வி பயத்தால் இப்படி வன்முறையைக் கையிலெடுப்பவர்களுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறை, முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் களத்தில் உள்ள நமது கழக உடன்பிறப்புகள் வன்முறையாளர்களிடம் கவனமாக இருந்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்' என அதில் கூறிப்பிட்டுள்ளார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 14.04.19

ஓசூரில் கழக வேட்பாளரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம்!
வன்முறையாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! தினகரன் அறிக்கை...

அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
தமிழகம் எங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு நாளுக்கு நாள்  மக்களின்  ஆதரவு பெருகி வருவதை துரோகிகளாலும், எதிரிகளாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வன்முறையைக் கையிலெடுத்து அதன் மூலம் நம்முடைய இயக்கத்தில் இருக்கிற ஜெயலலிதா அவர்களின் உண்மைத் தொண்டர்களை அச்சுறுத்த நினைக்கிறார்கள். அப்படித்தான் ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. புகழேந்தி அவர்களுடைய பிரச்சார வாகனத்தை அடித்து உடைத்திருக்கிறார்கள். 
தேன்கனிக்கோட்டை சாலையில் வைத்து, இரு சக்கர வாகனத்தில் கையில் நீண்ட கத்திகளோடு வந்தவர்கள் இத்தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக வேட்பாளர் அப்போது வாகனத்தில் இல்லாததால், உயிர் தப்பி இருக்கிறார். தோல்வி பயத்தால் இப்படி வன்முறையைக் கையிலெடுப்பவர்களுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் களத்தில் உள்ள நமது கழக உடன்பிறப்புகள் வன்முறையாளர்களிடம் கவனமாக இருந்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.