தென் சென்னை மக்களைவத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து கோட்டூர்புரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "சென்னை மாநகராட்சி சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. மிகப்பெரிய மாநகராட்சியான மும்பை, கொல்கத்தாவைவிட சென்னை சிறந்து விளங்குகிறது. அதனை வழிநடத்தும் அதிமுக அரசுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் சென்னையின் முக்கிய பகுதியாக விளங்கும் மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை ஆகியவை புதுபொலிவோடு சீரமைக்கப்பட்டு வருகிறது. இதே போன்று சென்னைக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் இந்த அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது.
இந்த மக்களவைத் தேர்தல் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றக்கூடிய தேர்தலாக அமைய வேண்டும். மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்தால், வரும் காலங்களில் நாடு வல்லரசாக மாறும்” என்றார்.