ETV Bharat / elections

பாகிஸ்தான் அகதிகளுக்கும் வாக்குரிமை கொடுத்த நாடு இந்தியா - தா.பாண்டியன்

மதுரை : பாகிஸ்தான் அகதிகளுக்கும் வாக்குரிமை கொடுத்த நாடு இந்தியா என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தா. பாண்டியன்
author img

By

Published : Apr 10, 2019, 8:47 AM IST

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, 'இந்திய மண்ணில் பிறந்த நம் அனைவருக்கும் வாக்குரிமை சமம் என துணிச்சலோடு அறிவித்தவர் டாக்டர் அம்பேத்கர். இந்தப்பெருமை உலகில் வேறு எந்த நாட்டுக்கும் கிடையாது. அதேபோல் பாகிஸ்தான் அகதிகளுக்கும் வாக்குரிமை கொடுத்த நாடு இந்தியாதான்.

மோடி ரூ.15 லட்சத்தை உங்கள் வீட்டு பெண்களின் வங்கிக்கணக்கிலும், உங்கள் கணக்கிலும் செலுத்துகிறேன் என்று சொல்லி நம்மை எல்லாம் ஏமாற்றி வாக்குகளை வாங்கிக் கொண்டார். அவருக்கு இந்தத் தேர்தலில் சரியான பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும்' என அவர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.