ETV Bharat / elections

'தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும்... ராகுல் கூறிய கருத்துக்கு நான்தான் காரணம்!' - ராகுல்காந்தி கருத்து

சென்னை: தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும் என ராகுல்காந்தி கூறுவதற்கு காரணம் தான்தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்
author img

By

Published : Apr 14, 2019, 8:26 AM IST

வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான காளியம்மாள், மெர்லின் சுகந்தி ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர். திமுக பொருளாளர் வீட்டில் மட்டும்தான் பணம் இருந்ததா? மற்ற கட்சி வேட்பாளர்கள் வீட்டில் பணம் இல்லையா? தேர்தல் ஆணையம் ஏன் மற்ற இடங்களில் சோதனை நடத்தவில்லை.

சீமான்

மேலும் தேர்தல் ஆணையம் என்பது ஒரு நாடக நிறுவனம் ஆகும். இந்த ஐந்தாண்டுகள் எதுவும் செய்ய முடியாத பாஜக அரசு, அடுத்த ஆட்சிக்கு வந்தால் செய்து விடுமா? காங்கிரசும் இதற்கு விதிவிலக்கல்ல.

ராகுல் காந்தி வட இந்தியாவிலும் போட்டியிடுவார்-வயநாட்டிலும் போட்டியிடுவார். தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும் என்று ராகுல் காந்தி பேசுவதற்கு காரணம் நான்தான். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை, பெரம்பூர்

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் காளியம்மாள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் மெர்லின் சுகந்தி ஆகியோரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர்,

 நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான ஆயுதங்களை வெளிநாட்டில் வாங்குவது பேராபத்து. 
தேர்தல் லாபத்திற்காக நம் நாட்டு ராணுவ வீரர்களை கொன்று விட்டது பாஜக அரசு.. 
 மாநிலங்களவை உறுப்பினர்கள் , மத்திய அமைச்சர் ஆகக்கூடாது என்ற சட்டம் கொண்டு வரவேண்டும்.. 
 துரைமுருகன் வீட்டில் மட்டும் தான் பணம் இருந்ததா? மற்ற வேட்பாளர்கள் வீட்டில் பணம் இல்லையா? தேர்தல் ஆணையம் ஏன் மற்ற இடங்களில் சோதனை நடத்தவில்லை...
 தேர்தல் ஆணையம் என்பது நாடக கம்பெனி...
இந்த ஐந்து ஆண்டுகள் செய்ய முடியாததை பாஜக அரசு அடுத்த ஆட்சிக்கு வந்தால் செய்து விடுமா... 
காங்கிரஸ்சும் இதற்கு விதிவிளக்கல்ல.... 
தேர்தல் லாபத்திற்காக புல்வாமா தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.... 
இதை எல்லாம் கேட்டால் தேச துரோகி என்ற பெயர் வைத்து விடுகிறார்கள்.... 
அறிவை வளர்க்கிற  கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றை எந்த அரசு இலவசமாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறேதோ அது தான் உண்மையான அரசு.... 
எல்லாவற்றையும் தனியார்க்கு தாரை வார்த்துவிட்டு இந்த  அரசு என்ன தான் செய்ய போகிறது.... 
நாட்டிற்கு எதுவெல்லாம் அத்தியாவசியமோ அதை எல்லாம் நம் தேசத்தில் தனியார்க்கு தாரை வார்த்து விட்டது இந்த அரசு.... 
பெண்களுக்கு சரி பாதி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.... 

ராகுல் காந்தி வட இந்தியாவிலும் போட்டி இடுவார், வயநாட்டிலும் போட்டி இடுவார்... எந்த இடத்தில் தோற்றாலும் அங்கு ஒரு இடை தேர்தல் நடக்கும், அதை நடத்துவதற்கு மக்கள் பணம் தான் செலவு செய்யப்படுகிறது ... 
சின்னங்கள் இல்லாத தேர்தல் நடைமுறை வரவேண்டும்... 
தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும் என்று ராகுல் காந்தி பேசுவதற்கு காரணம் நான் தான்... 
 கடந்த மக்களவை தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்றும் அதிமுக எதையும் செய்யவில்லை என்றார்...

Visual - TN_CHE_02_13_NAAM TAMILAR_SEEMAN_NORTH CHENNAI _CAMPAIGN_VISUAL_7204438
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.