ETV Bharat / elections

பரப்புரை செய்யாத வேட்பாளர்... கட்சியினர் பரிதவிப்பு

author img

By

Published : Apr 12, 2019, 8:05 PM IST

நாகர்கோயில்: மக்கள் நீதி மைய்ய கட்சியின் குமரி மக்களவை தொகுதி வேட்பாளர் தேர்தல் பரப்புரையில் ஈடுப்படாததால் அக்கட்சி தொண்டர்கள் தேர்தல் பணியை புறக்கணித்துள்ளனர்.

கன்னியாகுமாரி தொகுதி வேட்பாளர் எபினேசர்

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் எபினேசர் என்பவர் போட்டியிடுகிறார். இவர் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், சென்னையில் வசித்து வருகிறார்,

எபினேசருக்கு, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது, அம்மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வேட்புமனு தாக்கலுக்கு கூட மொத்தம் ஐந்து பேருடன் வந்து மனு அளித்து விட்டு சென்ற வேட்பாளர் எபினேசர், பின்னர் தொகுதி பக்கமே வரவில்லை என்று அக்கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

தேசிய, மாநில கட்சியின் முக்கிய தலைவர்கள் குமரியை நோக்கி படையெடுத்து, இறுதி கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், இவர் தற்போது எங்கே இருக்கிறார், குமரியில் எங்கு பரப்புரை செய்கிறார் என்ற தகவல் பொதுமக்களுக்கு மட்டுமில்ல, பத்திரகையாளர்களுக்கு கூட தெரியவில்லை.

ஓட்டு பதிவுக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபடாத வேட்பாளரால், மக்கள் நீதி மய்ய கட்சியின் அம்மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பணியை புறக்கணித்துள்ளனர்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் நடிகர் கமலின் கட்சியான மக்கள் நீதி மைய வேட்பாளரை பிரச்சார களத்தில் காணாததால் உள்ளூர் கட்சி தொண்டர்கள் தேர்தல் பணியை புறக்கணித்துள்ளனர்.

லோக்சபா தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரி என, 40 தொகுதிகளில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணிகளின் நேரடி போட்டி நடக்கிறது. இதில் சில தொகுதிகளில் கணிசமான ஓட்டுகளை பிரிக்கும் தகுதியுடன் அ.ம.மு.க., வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

தமிழகத்தின் முக்கிய தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாத முதல் தேர்தலான இந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., தரப்பில் ஸ்டாலினும், அ.தி.மு.க., தரப்பில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநிலத்தில் முக்கிய கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ.,வுடனும், தி.மு.க., காங்கிரசுடனும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. 
இந்நிலையில், கமலுடைய மக்கள் நீதி மய்யமும், தன் பங்கிற்கு அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், உள்ளூர் நிர்வாகிகள் பலர் களத்தில் இருக்க திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவரும் சென்னையில் வசிப்பவருமான எபினேசரை வேட்பாளராக அறிவித்தது கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   

‘என் தேசம், என் உரிமை’ என்ற பெயரில் சென்னையில் கட்சி துவங்கியது மற்றும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டது ஆகிய தகுதிகளை மட்டுமே வைத்து எபினேசருக்கு, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது, மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வேட்புமனு தாக்கலுக்கு கூட மொத்தம் 5 பேருடன் வந்து மனு அளித்து விட்டு சென்ற வேட்பாளர் எபினேசர், பின்னர் தொகுதி பக்கமே வரவில்லை என்று கட்சியினர் கலாய்க்கின்றனர். 

தேசிய, மாநில கட்சியின் முக்கிய தலைவர்கள் குமரியை நோக்கி படையெடுத்து, இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ”டார்ச்“ சின்னத்தை பெற்ற கட்சியின் குமரி வேட்பாளர் எங்கே இருக்கிறார், எங்கு பிரசாரம் செய்கிறார் என்ற தகவல் பொது மக்களுக்கு மட்டுமில்லை, பத்திரிகையாளர்களுக்கு கூட தெரியாத மர்மமாக உள்ளது. ஓட்டு பதிவுக்கு ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபடாத வேட்பாளரை நினைத்து, உள்ளூர் கட்சியினர் தேர்தல் பணியை புறக்கணித்துள்ளனர். 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.