வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வேலூர் மாவட்ட திமுகவும் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறது.
ஏனெனில், அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ஏ.சி. சண்முகம் பண பலத்திலும், இதர பலங்களிலும் வலுவாக இருப்பதால், வேலூரை எப்படியும் கைப்பற்றிட வேண்டும் என திமுக முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில், கதிர் ஆனந்துக்கு ஆதரவாக அவரது மனைவி சங்கீதா வேலூர் முழுவதும் வீடு வீடாக சென்று வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகிறார். குறிப்பாக, கன்னட மக்கள் வசிக்கும் பகுதியில் கன்னடத்தில் பேசி அவர் வாக்கு சேகரித்தது அப்பகுதி மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இதற்கிடையே, வாக்குக்காக ஆசை வார்த்தை பேசி மக்களிடம் அவர் நெருங்குவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.