ETV Bharat / elections

துரைமுருகன் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திருப்பம்! - பணம்

வேலூர்: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கனரா வங்கி மேலாளர் தயாநிதி வீட்டில் வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தியுள்ளனர்.

துரைமுருகன் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திருப்பம்!
author img

By

Published : Apr 11, 2019, 11:48 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள கனரா வங்கியில் மேலாளராக இருப்பவர் தயாநிதி. இவரது வீடு காந்தி நகர் 2வது குறுக்கு தெருவில் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு திடீரென தயாநிதி வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில், பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்கள் அல்லது தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீட்டில்தான் இதுபோன்று ஐடி ரெய்டு நடைபெறுவது வழக்கம்.

வங்கி அலுவலர்களை பொருத்தவரை வருமான வரியை முறையாக செலுத்திவிடுவார்கள் அதாவது அவர்களது சம்பளத்திலிருந்து அரசு சார்பில் வருமான வரி பிடித்தம் செய்யப்படும். இந்த சூழ்நிலையில் வங்கி மேலாளர் வீட்டில் ஏன் சோதனை என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக பொருளாளர் துரைமுருகன், அவரின் நெருங்கிய நண்பர் சீனிவாசன், அவரது சகோதரி விஜயா ஆகியோர் வீட்டில் கடந்த வாரம் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது விஜயா வீட்டில் ரூபாய் 11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அந்த பணத்தில் காட்பாடி காந்தி நகர் கனரா வங்கி கிளையின் சீரியல் நம்பர் இருந்ததால் அந்த வங்கியின் மேலாளரான தயாநிதி வீட்டில் சோதனை நடத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Intro:துரைமுருகன் தரப்படும் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்

காட்பாடி கனரா வங்கி மேலாளரிடம் ஐடி அதிகாரிகள் துருவி துருவி விசாரணை

Body:வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள கனரா வங்கியில் மேலாளராக இருப்பவர் தயாநிதி. இவரது வீடு காந்தி நகர் 2வது குறுக்கு தெருவில் உள்ளது இந்நிலையில் நேற்று இரவு திடீரென தயாநிதி வீட்டிற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர் அதிகாரிகள் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தயாநிதி, எதற்காக வந்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார் அதற்கு அதிகாரிகள் உங்கள் வீட்டில் சோதனை மற்றும் உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர் தொடர்ந்து இன்று இரவு 7.15 மணி வரை கிட்டத்தட்ட 15 மணி நேரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர் அப்போது தயாநிதியிடம் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டுள்ளனர் பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் உரிமையாளர்கள் வீட்டில்தான் இதுபோன்று ஐடி ரெய்டு நடைபெறுவது வழக்கம் வங்கி அதிகாரிகள் பொருத்தவரை வருமான வரியை முறையாக செலுத்திவிடுவார்கள் அதாவது அவர்களது சம்பளத்திலிருந்து அரசு சார்பில் வருமான வரி பிடித்தம் செய்யப்படும் இந்த சூழ்நிலையில் வங்கி மேலாளர் வீட்டில் ஏன் சோதனை என்ற கேள்வி எழுந்தது இதுகுறித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது அதாவது, சமீபத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி வீடு மற்றும் கல்லூரியில் ஐடி அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர் அப்போது துரைமுருகன் வீட்டில் 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்ந்து காட்பாடி பள்ளிக்குப்பத்தில் துரைமுருகனின் நெருங்கிய நண்பரான சீனிவாசன் மற்றும் அவரது சகோதரி விஜயா ஆகியோர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் இந்த சோதனையின்போது விஜயா வீட்டில் ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது இந்த பணத்தில் காட்பாடி காந்தி நகர் கனரா வங்கி கிளையின் சீரியல் நம்பர் இருந்துள்ளது. எனவே அதன் அடிப்படையில் தயாநிதி வீட்டில் இன்று அதிகாரிகள் விசாரணைக்கு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது அதாவது தேர்தல் நேரத்தில் வங்கிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அதன்படி வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு தொகை மட்டுமே தினமும் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டும் அப்படி இருக்கையில் துரைமுருகன் தரப்பிடம் கைப்பற்றப்பட்ட பணம் கோடிக்கணக்கில் மொத்தமாக எப்படி வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது என்ற கேள்வி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வந்துள்ளது மேலும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கணக்கில் இருந்து தான் கோடிக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது எனவே விதிமுறையை மீறி மொத்தமாக கோடிக்கணக்கில் பணம் எடுக்க எவ்வாறு அனுமதி அளித்தீகள் என வருமான வரித்துறை அதிகாரிகள் தயாநிதியிடம் துருவி துருவி விசாரணை நடத்தி உள்ளனர் அதற்கு தயாநிதி தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்ததாக கூறப்படுகிறது இன்று இரவு 7. 15 மணி அளவில் இந்த விசாரணை முடிவடைந்தது அப்போது அதிகாரிகள் விசாரணைக்கு இடையில் தயாநிதி கமிஷன் பெற்றுக்கொண்டு தான் இதுபோன்ற விதிகளுக்கு முரணான பண பரிமாற்றத்திற்கு அனுமதி அளித்தார் என்ற கோணத்தில் அதிகாரிகள் அவரது வீட்டை சோதனையிட்டனர் அப்போது சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது

Conclusion:ஏற்கனவே துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது காட்பாடி காவல் நிலையத்தில் நேற்று 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இதனால் துரைமுருகன் தரப்புக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது இந்தநிலையில் துரைமுருகன் தரப்பு மீதான ஐடி ரெய்டு விவகாரம் இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பதால் திமுகவினர் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.