ETV Bharat / elections

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திருநாவுக்கரசர் பரப்புரை - election campiagn

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசர் பரப்புரை மேற்கொண்டார்.

திருநாவுகரசர் பரப்புரை
author img

By

Published : May 9, 2019, 12:32 PM IST

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் சண்முகையா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தொகுதிக்குட்பட்ட வல்லநாடு, தெய்வசெயல்புரம், புதியம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழியை நீங்கள் வெற்றி பெற செய்து இருப்பீர்கள் என நான் முழுமையாக நம்புகிறேன். அதேபோல் அடுத்துவரும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவையும் நீங்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

மோடி இந்திய நாட்டிற்கு பிரதமர் என்று சொல்வதை விட வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு தான் பிரதமராக இருந்து பல நாடுகளை சுற்றி சுகம் கண்டாரே தவிர இந்தியாவிற்குள் உள்ள பல மாநிலங்களுக்கு அவர் வரவே இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் புயல், வெள்ளம் தாக்கி வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் அடியோடு சாய்ந்த போது அவர் கண்டுகொள்ளவே இல்லை.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திருநாவுக்கரசர் பரப்புரை
அதுமட்டுமல்ல, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த போது அவரைக் காப்பாற்ற வேண்டும் என்றோ, வெளிநாட்டிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்றோ உடனிருந்த அமைச்சர்களும் நினைக்கவில்லை. பிரதமராக இருந்த மோடியும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால், இன்று அதையெல்லாம் மறந்து மானமில்லாமல் பாஜகவுடன் அதிமுகவினர் கூட்டணி அமைத்துள்ளனர். அதற்கான விலையை அதிமுகவினர் பெறுவார்கள்” என உரையாற்றினார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற மே 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வல்லநாடு, தெய்வச்செயல்புரம், புதியம்புத்தூர், ஒட்டப்பிடாரம்  ஆகிய இடங்களில் பொது மக்களிடம் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறுகையில்,

ஏற்கனவே நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழியை நீங்கள் வெற்றி பெற செய்து இருக்கிறீர்கள் என நான் முழுமையாக நம்புகிறேன். அடுத்து வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சண்முகையாவுக்கு நீங்கள் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என இந்தியாவில் மே 23ம் தேதிக்குப் பிறகு பிரதமராக வரப்போகும் ராகுல் காந்தியின் சார்பில் கேட்டுக் கொள்ள வந்திருக்கிறேன். பாராளுமன்ற தேர்தல் என்பது இந்திய அளவில் மிக முக்கியமான தேர்தல். மத்தியில் ஆட்சி மாற்றம் கொண்டு வருவதற்கான தேர்தல்.
அதுபோல் சட்டமன்ற தேர்தல் என்பது தமிழக அளவில் மிகவும் முக்கியமான தேர்தல். கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களிடத்தில் பல்வேறு பொய்களைச் சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர் பிரதமர் மோடி.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன் எனக் கூறினார். ஆனால் இதுவரை கருப்பு பணமும் வரவில்லை. அவரும் வரவில்லை. அவர் இந்திய நாட்டிற்கு க்ஷ பிரதமர் என்று சொல்வதை விட வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு தான் பிரதமராக இருந்து பல நாடுகளை சுற்றி சுகம் கண்டாரே தவிர இந்தியாவிற்குள் பல மாநிலங்களுக்கு அவர் வரவே இல்லை. குறிப்பாக தமிழகத்தில் பெரிய அளவில் புயல், வெள்ளம் தாக்கி வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் அடியோடு சாய்ந்த போது எந்தவித சொரணையும் இல்லாமல் அவர் தமிழகத்தை கண்டுகொள்ளவே இல்லை.
அதுமட்டுமல்ல மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த போது அவரை காப்பாற்ற வேண்டும் என்றோ, வெளிநாட்டிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்றோ உடனிருந்த அமைச்சர்களும் நினைக்கவில்லை. பிரதமராக இருந்த மோடியும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால் இன்று அதையெல்லாம் மறந்து மானமில்லாமல் அதிமுகவினர்- பிஜேபியுடன்  கூட்டணி அமைத்துள்ளனர். அதற்கான விலையை அதிமுகவினர் பெறுவார்கள்.

நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் தான் வெற்றி பெற போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. இது மத்தியில் ஆட்சியை மாற்றத்தை கொண்டுவர, மத துவேஷத்தை, சாதி துவேசத்தை தூண்டி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை வீழ்த்த உதவப்போகிறது. அதேபோல இந்த சட்டமன்ற தொகுதியில் நீங்கள் அளிக்கப்போகும் வாக்கானது பிஜேபி ஆட்சியின் பினாமியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமியின் அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காக.

எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தது போதும். மக்களாகிய நீங்கள் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்காக, எம்ஜிஆருக்காக, அதிமுக கட்சிக்காக வாக்களித்திருப்பீர்கள். ஆனால் இன்று எம்.ஜி.ஆரும் இல்லை. ஜெயலலிதாவும் இல்லை. அதிமுக கட்சியும் ஒன்றாக இல்லை. பல அணிகளாக பிரிந்து கிடக்கிறது. டிடிவி தினகரனிடம் ஒரு அணி. முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம்  இருக்கும் ஓபிஎஸ் அணி. பன்னீர்செல்வம் அணி என தனித்தனியாக பிரிந்து கிடக்கின்றனர். முதலமைச்சர் மீதான வாக்கெடுப்பின்போது முதலமைச்சருக்கு எதிராக சட்டமன்றத்திலே வாக்களித்துவிட்டு இன்று அதே அமைச்சரவையில் துணை முதல்வராக ஒட்டிக் கொண்டுள்ளார் பன்னீர்செல்வம்.

ஆகவே இப்படி மூன்று நான்கு அணிகளாக முதுகெலும்பில்லாத ஆட்சியை, மோடி அரசின் பினாமி ஆட்சியை பிரதமர் மோடியின் அடிவருடிகளாக இன்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதிமுகவினர். அவர்களை வீழ்த்த வேண்டும்.

ஆகவே தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஒட்டப்பிடாரத்தில் சண்முகையாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், நடைபெற உள்ள இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஆகியவற்றில் பெரும்பான்மையான இடங்களில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வெற்றி பெற்று தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பு இருக்கும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

தினகரன் அணி சார்பாக வேட்பாளராக நிற்கும் எம்எல்ஏவுக்கு வாக்களித்தால் இங்கு எந்தவித மாற்றமும் நிகழப் போவதில்லை. அதுபோல் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்தாலும் எந்தவித மாற்றமும் இருக்கப்போவது இல்லை. ஊழல் தான் பெருகும். அதிமுக அமைச்சர்கள் அனைவரின் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளை வைத்துதான் பிரதமர் மோடி மிரட்டி வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் நடைபெறும் இந்த இரண்டு ஆண்டுகால ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. ஆகவே இந்த ஊழல் மிகுந்த ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியை பிஜேபி அரசின் பினாமி ஆட்சியை மாற்றுவதற்கு பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என திருநாவுக்கரசர் பேசினார்.

Visual FTP.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.