அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என 100க்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல் செய்னர்.
இம்மனுக்கள் மீது பரிசீலனை முடிந்த நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும். மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து இன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த தொகுதித் தேர்தல் நடத்தும் அலுவலர் வளாகத்தில் உள்ள தகவல் பலகையிலும் வேட்பாளர் பட்டியல் ஒட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.