ETV Bharat / elections

திராவிட கழகத்தினர் இந்து கடவுள்களை பற்றி பேசியது தவறு- டிடிவி கருத்து

திருச்சி: திராவிடர் கழகத்தினர் இந்து கடவுள்களை இழிவுப்படுத்தி பேசியது தவறு என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்
author img

By

Published : Apr 5, 2019, 4:51 PM IST

Updated : Apr 5, 2019, 11:38 PM IST

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, "2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக பெற்ற மாபெரும் வெற்றியை போல் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிச்சயமாக வெற்றி பெறும். சுதந்திர நாட்டில் தேர்தல் பரப்புரையின்போது எதிரான கருத்துக்கள் கூறப்பட்டால், வழக்கு தொடரலாமே தவிர, கூட்டத்தில் புகுந்து தாக்குவது தவறான முன்னுதாரணமாகும்.

டிடிவி பேட்டி

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. இந்த அமைதிப் பூங்காவில் தேவையில்லாத கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணியினர் புகுந்து தாக்குதல் நடத்தியது சரியான செயல்பாடு கிடையாது. அவர்கள் தவறாக பேசியிருந்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். மேலும் திராவிடர் கழகத்தினர் இந்து கடவுள்களை இழிவுப்படுத்தி பேசியது தவறுதான்" இவ்வாறு அவர் கூறினார்.

Intro:திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்

Body:திருச்சி: திராவிடர் கழகத்தினர் இந்துக் கடவுள்களை இழிவு படுத்தி பேசுவது தவறு என்று டிடிவி தினகரன் கூறினார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பிரசாரம் செய்தார். பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அவர் நேற்று இரவு திருச்சியில் தங்கினார். இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் புறப்பட்டுச் செல்வதற்கு முன் திருச்சியில் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பெற்ற மாபெரும் வெற்றியை போல் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிச்சயமாக வெற்றி பெறும்.
சுதந்திர நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிரான கருத்துக்கள் இருந்தால் வழக்கு தொடரலாமே தவிர கூட்டத்தில் புகுந்து தாக்குவது தவறான முன்னுதாரணமாகும். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. இந்த அமைதிப் பூங்காவில் தேவையில்லாத கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் திராவிடர் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியது சரியான செயல்பாடு கிடையாது. அவர்கள் தவறாக பேசியிருந்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுத்தால் அது ஆபத்து. கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் முடிவு ஏற்படும். இந்துக் கடவுள்கள் குறித்து திராவிட கழகத்தினர் இழிவாக பேசி வருவது தவறு தான். எனினும் அதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. சட்டபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது குறித்து வழக்கு பதிவு செய்வது அதிகார துஷ்பிரயோகம். அன்புமணி ராமதாஸ் பேசியபோது வழக்கு போடுகிறார்களா?. தோல்வி பயம் காரணமாக அமைச்சர்களை விமர்சனம் செய்பவர்கள் மீது ஆளுங்கட்சியினரால் வழக்கு தொடுக்கப்படுகிறது. துரைமுருகன் வீட்டில் கட்டுகட்டாக பணம் வைத்திருந்தது தவறு. ஆனால் தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளை குறிவைத்து சோதனை நடத்துவது சரியல்ல. ஆளுங்கட்சிக்கு ஒரு அளவுகோல், எதிர்க்கட்சிக்கு ஒரு அளவுகோல் வைத்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. ஆளுங்கட்சியினரிடமும் சோதனை செய்ய வேண்டும் என்றார்.

Conclusion:திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கட்டுகட்டாக பணம் வைத்திருந்தது தவறுதான் என்று டிடிவி தினகரன் கூறினார்.
Last Updated : Apr 5, 2019, 11:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.