தமிழகம் மற்றும் புதுவையில் வருகின்ற 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் வெளியான நாள் முதலே தேர்தல் நடத்தை விதிமுறையும் அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ, “வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விட்டது. இதுவரை மொத்தம் 124.53 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ரூ.2.33 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக இதுவரை 4,185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மே 27ஆம் தேதி வரை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.