மேற்கு வங்கம், ஹவ்ராவில் நடைப்பெற்ற பாஜக பேரணியில் பங்குபெற்ற பாஜக தேசிய பொது செயலாளர் கைலாஷ் விஜய் வர்கையா பேசியதாவது, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சி மாற்றப்படவில்லை என்றால் அம்மாநிலத்தில் ஜம்மு-காஷ்மீரைப் போல் தீவிரவாதம் தலை விரித்தாடக் கூடிய வாய்ப்பு உள்ளது.
அண்டை நாடான இலங்கையில் சமீபத்தில் நடைப்பெற்ற ஈஸ்டர் பண்டிகையின்போது பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சார்ந்த ஒரு இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்று கொண்டது. ஐஎஸ் அமைப்பு மேற்கு வங்க எல்லையில் நுழையக்கூடும் என்று சமீபத்தில் தனியார் தொலைகாட்சி வாயிலாக தகவல் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய மேற்கு வங்கத்தில், மம்தாவின் சமரச அரசியலால் அம்மாநிலத்தில் நடக்கும் சாதாரன வன்முறையை கூட கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில் எப்படி அவரால் தீவிரவாதத்தை தடுத்து நிறுத்தமுடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த மக்களவை தேர்தலில் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து மம்தா பானர்ஜிக்கு தக்க பதிலடி கொடுப்போம் என அவர் சாடியுள்ளார்.