ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் கன்னையா குமார் பீகாரில் உள்ள பெகுசாராய் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பல சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் அங்கு பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
அந்தவகையில், இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி மூன்று நாட்களாக பரப்புரை செய்தார். இவரைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, நடிகர் பிரகாஷ் ராஜ், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஆகியோர் நேற்று பரப்புரையில் ஈடுபட்டனர்.

பிரகாஷ் ராஜ் மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.