ETV Bharat / elections

ராஜ்நாத் சிங்குக்கு எதிராக களமிறங்கும் நடிகரின் மனைவி

லக்னோ மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.

பூனம் சின்ஹா
author img

By

Published : Apr 16, 2019, 5:44 PM IST

மக்களவைத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லக்னோ தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா போட்டியிடுவார் என சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. லக்னோ மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக ராஜ்நாத் சிங்தான் இம்முறையும் போட்டியிடுகிறார்.

1991 முதல் நடந்த அனைத்து தேர்தலிலும் பாஜகதான் இங்கு வென்றது. இம்முறை இங்கு வென்றாக வேண்டும் என எண்ணிய சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா, முன்னாள் உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்புள் யாதவ் முன்னிலையில் இன்று சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவர் ரவிதாஸ் மேரோத்ரா கூறுகையில், எங்கள் கூட்டணி சார்பாக லக்னோ தொகுதியில் பூனம் சின்ஹா போட்டியிடுகிறார். ஏப்ரல் 18ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்வார். காங்கிரஸ் கட்சியை இந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் எனக் கேட்டுகொண்டுள்ளோம் என்றார்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.