17ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், பிகார், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. காலை முதல் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியுடன் அவரது கணவர் ராபர்ட் வதேரா, டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட்டில் வாக்களித்தார். இந்நிலையில், வாக்களித்து விட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய தேசியக் கொடிக்கு பதிலாக பரகுவை(Paraguay) நாட்டின் தேசியக் கொடியை பதிவேற்றம் செய்துள்ளார். இதனை எள்ளி நகையாடி சிலர் ராபர்ட் வதேராவை விமர்சித்துள்ளனர். பிறகு தன் ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த பதிவை ராபர்ட் வதேரா நீக்கயுள்ளார்.